நீலகிரி: கோவையில் இருந்து உதகை நோக்கி சென்று கொண்டிருந்த நீதிபதியின் கார் நிலை தடுமாறி 20 அடி பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.

சென்னையிலிருந்து உதகைக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றத்தி்ல இருந்து அதிகாரிகள் வந்திருந்தனர். இவர்களை நேற்று இரவு வழியனுப்பி விட்டு உதகை நீதிமன்ற ஓட்டுனர் ரவி மீண்டும் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்.
அந்த கார் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் டபுள் ரோடு பகுதியில் எதிரே வந்த லாரிக்கு வழிவிடும் போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த 20 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.
அபாயகரமான பகுதியில், எந்தவிதமான எச்சரிக்கை பலகையோ, இரவில் ஔி உமிழும் எச்சரிக்கை ஸ்டிகர்களையோ நெடுஞ்சாலை துறையினர் பொருத்தாமல் இருந்ததே, இந்த விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த கார் மீட்பு வாகனம் மூலம் மீட்கப்பட்டது.

இதன் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.