வருவாய் துறை அதிகாரிகளின் பெயரில் போலிச் சான்றிதழ்கள் வழங்கி மோசடி : திருப்பூரில் பெண் கைது

திருப்பூர் : தாசில்தார் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்களின் கையெழுத்திட்டு போலி சான்றிதழ்கள் வழங்கி மோசடி செய்த சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் : தாசில்தார் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்களின் கையெழுத்திட்டு போலி சான்றிதழ்கள் வழங்கி மோசடி செய்த சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். 



திருமுருகன்பூண்டி பகுதியைச் சேர்ந்த மாசானவடிவு என்கிற பெண் நீதிமன்ற ஜாமீன் மற்றும் அரசு சலுகை பெறக்கூடிய வகையில் தாசில்தார், வி.ஏ.ஓ உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளின் கையெழுத்து மற்றும் போலி முத்திரை பயன்படுத்தி போலி சான்றிதழ்கள் வழங்கி வந்துள்ளார். தொடர்ந்து பல போலி ஆவணங்கள் திருப்பூரில் கொடுக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, போலி சான்றிதழ் புழக்கத்தை ஒழிக்கும் வகையில், வருவாய் துறை அலுவலர்கள் இணைந்து மணி என்பவர் உதவியுடன் போலி ஜாமின் சான்றிதழ் தயார் செய்து தர வேண்டும் என மாசானவடிவை அணுகியுள்ளனர்.

சான்றிதழை அளிக்க ரூ. 8,000 பேரம் பேசப்பட்டு, முன்பணமாக ரூ. 2,500-ஐ கொடுத்துள்ளார். இதனையடுத்து, இன்று போலி சான்றிதழ்களைத் தயார் செய்து மணியை தொடர்பு கொண்டு கொடுத்துள்ளார். அப்போது, அவரை கையும் களவுமாகப் பிடித்த வருவாய் துறையினர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த சார் ஆட்சியர் ஷ்ரவண்குமார் மாசானவடிவிடம் போலி சான்றிதழ்கள் தயார் செய்ய உதவியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டார். 



இந்த சம்பவம் தொடர்பாக சார் ஆட்சியர் ஷ்ரவண்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில், தொடர்புடையவர்கள் பெரிய கும்பலாக இருக்கக்கூடும். விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். வடக்கு தாசில்தார் கொடுத்த புகாரின்பேரில் வடக்கு காவல்நிலைய போலீசார் மாசானவடிவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்," என்றார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...