கோவையில் மழையிலும் தொடரும் புலிகள் கணக்கெடுப்பு

கோவை: ஆண்டுதோறும் கோவையில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கோயம்புத்தூர் வனப்பகுதிகளில் உள்ள புலிகள் குறித்த கணக்கெடுப்பு இன்று தொடங்கியுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த இந்த கணக்கெடுப்பு பணியில் தன்னார்வலர்கள், வனத்துறையினர் என மொத்தம் 100 பேர் இந்த பணியில் ஈடுபட உள்ளனர்.

நேரடியாகப் பார்த்தல், காமிரா கொண்டு கண்காணித்தல், காலடித் தடம் கொண்டு அறிதல் போன்ற பல்வேறு முறைகளில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணிகள் நேற்று தொடங்கியது. மழையின் போதும் இன்று அந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோவையில் உள்ள 7 வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதிகளிலும் காலை 6.30 மணியில் இருந்து இந்த பணி நடைபெற்று வருகிறது. 

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "ஜி.பி.எஸ் கருவிகள் மூலம் தன்னார்வலர்கள் சேகரிக்கும் தகவல்கள், மற்றும் அவர்கள் இருக்கும் இடங்கள் அறியப்படுகிறது. காலடித்தடம், எச்சம் மற்றும் நேரடியாக பார்த்தல் போன்ற பல்வேறு ஆதாரங்கள் மூலம் புலிகள் கணக்கெடுக்கப்படுகிறது.

இதன் மூலம் துல்லியமான எண்ணிக்கையை நம்மால் பெற முடியும். வனப்பகுதிகளில் காமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. 

இந்த தகவல்களை M-STrIPES (Monitoring System for Tiger Intensive-Protection and Ecological Status) என்ற நவீன ஆப் மூலம் சேகரிக்கிறோம்." என்றனர். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...