நீலகிரி: ரெட் அலர்ட் பணிக்காக சென்னையிலிருந்து உதகை வந்திருந்த காவல்துறை வாகனம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்திற்குள்ளானதில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 6 போலீசார் படுகாயமடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் ரெட் அலர்ட் வெள்ள நிவாரண பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு சென்னையில் இருந்து 30 பேர் கொண்ட 13-வதி பட்டாலியன் போலீசார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உதகைக்கு வந்திருந்தனர். பணிகள் முடிந்து இன்று அவர்கள் அனைவரும் காவல்துறை பேருந்தில் நெல்லை மாவட்டத்தில் பெறும் நிகழ்ச்சியின் பாதுகாப்பு பணிக்காக திரும்பிக் கொண்டிருந்தனர்.

அந்த வாகனம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆர் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பிரேக் பிடிக்காமல் அருகிலிருந்த தடுப்பில் மோதி நின்றது. இதில் 13-வது பட்டாலியன் ஆய்வாளர் சந்திரபோஸ், ஓட்டுநர் சிவா உள்ளிட்ட 8 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.