சென்னை: ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூனே-யில் இருந்து இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த அவரை நான்கு பேர் கொண்ட தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். நக்கீரன் கோபால் மீது ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் தற்போது விமான நிலைய வளாகத்திலேயே வைக்கப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தை விமர்சித்து செய்தி வெளியிட்ட விவகாரத்தில், ஆளுநர் மாளிகை தெரிவித்த புகாரை அடுத்து போலீசார் அவரை கைது செய்ததாக அறிவிக்கப்படுகிறது.