கோவையில் ஏலச்சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்தவர் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைப்பு

கோவை : கோவையில் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை, பாதிக்கப்பட்டவர்களே பிடித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

கோவை : கோவையில் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை, பாதிக்கப்பட்டவர்களே பிடித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.



கோவை சரவணம்பட்டி பகுதியில் சிவ சூர்யகிருஷ்ணா என்ற ஏலச்சீட்டு நிறுவனத்தை முரளிதரன் என்பவர் நடத்தி வந்தார். இவர் கோவையில் பூமார்க்கெட், காளப்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளிலும் கிளை ஆரம்பித்து செயல்பட்டு வந்தார். அதேபோல இவர்  நடத்திவரும் ஏலச்சீட்டுகளில் நூற்றுக்கணக்கானவர்களிடம் லட்சக்கணக்கான ரூபாய்களை வசூல் செய்துள்ளார். இதில் ஏலச்சீட்டில் கட்டிய பணத்தை பொதுமக்கள் திருப்பிக் கேட்டபோது காலம் தாழ்த்தி வந்தார். 



இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்னர் முரளிதரன் தான் நடத்தி வந்த நிறுவனங்களை மூடிவிட்டு, தலைமறைவு ஆனார். பல கோடி ரூபாயை மோசடி செய்து தலைமறைவான முரளிதரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களே முரளிதரனை தேடி கண்டுபிடித்துள்ளனர். 



கோவையை அடுத்த கணுவாய் பகுதியில் தலைமறைவாக இருந்த முரளிதரனை பிடித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். முரளிதரன் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தங்களது பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...