நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை அருகே எல்ல நள்ளிப் பகுதியில் சாலையின் குறுக்கே ராட்சதமரம் விழுந்ததால் குன்னூர் - உதகை இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கும்மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் உதகை அருகே எல்ல நள்ளிப் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே திடீரென அப்பகுதியில் இருந்த ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற உதகை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி சாலையில் விழுந்த மரத்தினை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.