கோவை : கனமழையால் சேதம் அடைந்துள்ள சாலைகளை சீரமைக்கக்கோரி மாவட்ட தி.மு.க., பொறுப்பாளரும், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏவுமான கார்த்திக், கோவை மாநகராட்சி ஆணையாளரை இன்று நேரில் சந்தித்து மனு அளித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- மாநகராட்சி 63-வது வார்டுக்குட்பட்ட கள்ளிமடை, ராஜவீதி, 74-வது வார்டு காந்திநகர், சன் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள சாலைகள் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு, பணிகளும் முடியாமல், சரிவர சாலைகள் சீரமைக்கப்படாமலும் உள்ளன. இதனால், குண்டும், குழியுமாகக் காணப்படும் இந்த சாலைகள், மழைக்காலங்களில் சேறும், சகதியுமாகி விடுகிறது.

இந்த சாலைகளில் பொதுமக்கள் நடந்து செல்லவோ, வாகனங்களில் செல்லவோ முடிவதில்லை. சேதமடைந்த சாலைகளால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த சாலைகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகத்தினர் போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளரிடம் வலியுறுத்தி மனு அளித்துள்ளேன். அதேபோல, ஜி.எம்.நகர் தெற்கு பகுதிக்குட்பட்ட ராஜவாய்க்கால் புதர்மண்டி பாழடைந்து காணப்படுகிறது. இதை தூர்வாரி சீரமைக்கவும், மாநகராட்சி ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளேன். சாலைகளை சீரமைக்கவும், வாய்க்காலையை சீரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் உறுதியளித்துள்ளார், என்றார்.