திருப்பூர் : அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் சஞ்சய் தத் தலைமையில் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் காங்கேயத்தில் நடைபெற்றது.

கடந்த 6-ம் தேதி நடந்த இந்தக் கூட்டத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி. கோடி, முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி. தங்கபாலு மற்றும் முன்னாள் மாநில தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் சஞ்சய் தத் கூறியதாவது :- கார்ப்பரேட்களுக்காக மட்டுமே செயல்பட்டு வரும் பா.ஜ.க. அரசிடம் இருந்து மக்களைப் பாதுகாக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஜி.எஸ்.டி.யினால் தொழிற்சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி.யில் இருந்து திரும்பக் கிடைக்கும் பணத்தை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஜி.எஸ்.டி.யின் கெடுபிடிகளால் 5,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன, இவ்வாறு அவர் கூறினார்.