நீலகிரி : உதகை அருகே குடியிருப்புகளுக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தையை கண்காணிக்க வனத்துறை சார்பில் கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நீலகிரி வனப்பகுதிகளில் யானை, புலி, மான், சிறுத்தை, காட்டெருமை போன்ற வன விலங்குகள் உள்ளன. வனப்பகுதிகளில் உணவு, நீர் பற்றாக்குறை ஏற்படுவதால் வனத்தில் உள்ள விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் அவ்வப்போது நுழைந்து மனிதர்களையும், கால்நடைகளையும் தாக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சில சமயங்களில் இந்த தாக்குதல்களால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, உதகை - குன்னூர் சாலையில் உள்ள நொண்டிமேடு பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஆட்டை வேட்டையாடி வனத்திற்குள் இழுத்து சென்றது. குடியிருப்புகளின் அருகே நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், சிறுத்தை போன்ற வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், சிறுத்தையின் நடமாட்டம் குறித்து கண்காணிக்க கேமராக்கள் பொருத்தும் பணி வனத்துறையினரின் சார்பில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்டறிந்து, அதனைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.