கோவை : கரும்புக்கடை பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி வெல்ஃபேர் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை : கரும்புக்கடை பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி வெல்ஃபேர் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை கரும்புக்கடை பகுதியானது சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாகும். 5 தனியார் பள்ளிகளும், 2 அரசு பள்ளிகளும் செயல்படுகிறது. நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் வெளியிடங்களுக்குச் சென்று கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி வெல்ஃபேர் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், தற்போது செயல்பட்டு வரும் அரசு ஆரம்பப் பள்ளியின் அடிப்படைத்தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவதுடன் அதனை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவது. அல்லது அருகாமையில் உள்ள பகுதியில் புதிய உயர்நிலைப்பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும். கரும்புக்கடை பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளையை உடனடியாக துவங்க ஆவண செய்ய வேண்டும். பொது மக்களுக்கான நூலகம் மற்றும் E- நூலகம் அமைத்திட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். பொதுமக்களுக்கான பூங்கா அமைத்திட வேண்டும் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொண்டு தர வேண்டும்.

அடிப்படைத் தேவைகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற ஆவண செய்ய வேண்டும் என வெல்ஃபேர் கட்சி கோவை தெற்கு மண்டல நிர்வாகம் சார்பாக கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல, கரும்புக்கடை பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை செப்பனிடுவது மற்றும் சாக்கடை வசதியை மேம்படுத்துவது உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.