திருப்பூர் : கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மின் இணைப்பு வேண்டி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்லடம் அறிவொளி நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில், 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின் இணைப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது. மேலும், மின் இணைப்பு இல்லாத காரணத்தால் தேர்வு காலத்தில் மாணவ, மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மின் இணைப்பு கோரி கடந்த 5 வருடங்களாக மின்சார வாரிய அதிகாரிகள் பலரிடம் மனு அளித்ததோடு, திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தருவதில் அலட்சியம் காட்டி வரும் அதிகாரிகளைக் கண்டித்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.