கோவை : சாமர்த்தியமாகச் செயல்பட்டு ரயில் விபத்தை தவிர்த்த ரயில் ஓட்டுநருக்கு தெற்கு ரயில்வேயின் சார்பில் சன்மானம் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் 20-ம் தேதி பிற்பகல் 2.50 மணிக்கு ரயில் எண் 16616 கோவை - மன்னார்குடி செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில், ஈரோடு மற்றும் சாவடிபாளையம் இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது, ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை அறிந்த ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு, ரயிலின் வேகத்தைக் குறைத்து பெரும் விபத்தை தவிர்த்தார். பின்னர், இது குறித்து சாவடிப்பாளையம் ரயில்நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, விரைந்து வந்த ஊழியர்கள் தண்டவாளத்தின் விரிசல் சரிசெய்து, ரயிலை அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், பல உயிர்களைக் காப்பாற்றிய கோவையைச் சேர்ந்த ரயில் ஓட்டுநர் இ.வி., மோனிகண்டன், துணை ரயில் ஓட்டுநர் எஸ்.நாகா லிங்கேஸ்வரனுக்கு தலா ரூ. 2,000 வழங்கி தெற்கு ரயில்வே துறை பொதுமேலாளர் ஆர்.கே. குல்ரேஷ்தா பாராட்டினார்.