நீலகிரி : உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
நீலகிரி : உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படும். இந்த மழையின் போது உதகை, குன்னூர், கோத்தகிரி, கொடநாடு போன்ற பகுதிகளில் மழை அதிகளவு பெய்யும். இந்தாண்டு இன்னும் ஒருசில தினங்களில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக உதகை மற்றும் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் வெயில் அடித்தாலும், இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில், இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் நிலவி வந்தது. மாலை உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பாய்ந்தோடுவதால் வாகனஓட்டிகள், பணிக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.