கோவை : ஈஷாவில் நவராத்திரி திருவிழா நாளை மறுநாள் முதல் அக்.18-ம் தேதி வரை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
கோவை : ஈஷாவில் நவராத்திரி திருவிழா நாளை மறுநாள் முதல் அக்.18-ம் தேதி வரை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு நவராத்திரி விழா நாளை மறுநாள் தொடங்கி அக்.18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, லிங்க பைரவியில் தினமும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். மந்திர உச்சாடனைகள், அர்ப்பணிப்புகள், விளக்குபூஜை போன்ற நிகழ்வுகளும் நடைபெறும்.
இதுதவிர, தினமும் மாலைநேரத்தில் பாரம்பரிய மற்றும் கிராமிய இசை, நடன நிகழ்ச்சிகளும் நடைபெறும். மேலும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.