தொழில்நுட்பக் கோளாறால் ஒரு மணி நேரம் செயலிழந்த 108 அவசர எண் : பொதுமக்கள் அவதி

கோவை : பி.எஸ்.என்.எல்., எண்ணில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசர எண்ணான '108', சுமார் ஒரு மணி நேரம் செயல் இழந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

கோவை : பி.எஸ்.என்.எல்., எண்ணில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசர எண்ணான '108', சுமார் ஒரு மணி நேரம் செயல் இழந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

இன்று சில மணி நேரமாக 108 அவசர உதவி ஆம்புலன்ஸ் அழைப்பு எண்ணுக்கு அழைத்தால் அழைப்பு போவதில்லை. அவசர காலத்திற்காக தொடர்பு கொண்ட போது, 'இந்த எண் தற்போது உபயோகத்தில் உள்ளது, சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்,' என்ற குரல் மட்டும் பதிவாகி அழைப்பு துண்டிக்கப்படுகிறது. இதனால், சாலை விபத்துக்கள் மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆபத்தான சூழலில் உள்ள நோயாளிகள் என பலரும் கடும் அவதியுற்றனர். 

அரசு மருத்துவமனைக்கு நிமிடத்திற்கு ஒரு ஆம்புலன்ஸ்கள் வருவது வழக்கம். ஆனால், சில நாட்களாக மிக தாமதமாகவே 108 வாகனம் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தது. பின்னர், தற்போது அவை சரிசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அடிக்கடி 108 வாகன அவசர எண் செயலிழப்பதால் பெரும் சிரமங்கள் ஏற்படுகிறது. இதைத் தடுக்க 108 நிர்வாகம் முறையாக செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்களில் ஒருவரான சிலம்பரசன் கூறியதாவது :- அடிக்கடி வாட்ஸ்அப்களில் 108 எண் செயல் இழந்துள்ளது என ஃபார்வேர்டு மெசேஜ் வந்து கொண்டிருக்கிறது. அதேபோலத் தான் இன்றும் 108 எண் செயல்படுவதில்லை என வந்த மெசேஜை தவறான ஃபார்வேர்ட் மெசேஜ் என நினைத்தேன். இருப்பினும், 108 எண்ணுக்குப் போன் செய்து பார்க்கலாம் என போன் செய்தேன். ஆனால், கால் போகவில்லை. அதேபோல, மீண்டும் அழைத்தேன். ஆனால், அந்த எண் தற்போது உபயோகத்தில் இல்லை என குரல் பதிவு மட்டுமே வந்தது. 

இந்த 108 எண் அடிக்கடி செயலிழப்பது வேதனைக்கு உரியது. இதனால், பொதுமக்களுக்கு பெரும் இழப்புகள் தான் உருவாகிறது. ஆகவே, இதுபோன்ற செயல் இனிமேல் நடக்காதபடி நிர்வாகமும், அரசும் செயல்பட வேண்டும், என்றார்.

இதுகுறித்து நிர்வாகத் தரப்பில் கூறியதாவது :- பி.எஸ்.என்.எல்.,லில் 108 சேவை தற்காலிக தொழில்நுட்பக் கோளாறாக இருந்தது. 108 எண் செயல் இழந்த போது உடனடியாக அவசர உதவிக்கு அழைக்க மருத்துவமனைகளுக்கு எண்களை கொடுத்தோம். அதன்படி, நோயாளிகளை ஏற்றிச் செல்ல காவல் நிலையங்கள் மூலமாகவும், ஆங்காங்கே உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டோம். பின்னர், தொழில்நுட்ப கோளாறையும் உடனடியாக சரி செய்து விட்டோம். தற்போது 108 ஆம்புலன்ஸ்க்கான அழைப்பு வழக்கம்போல சரியாக செயல்படுகிறது. பொதுமக்கள் எந்த நேரமும் 108 சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம், என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...