நாள்தோறும் கோவையில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவையை வழங்குகிறது ஸ்பைஸ்ஜெட்

கோவை : கோவையில் இருந்து நாள்தோறும் அடிப்படையில் டெல்லிக்கு விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் வழங்குகிறது.

கோவை : கோவையில் இருந்து நாள்தோறும் அடிப்படையில் டெல்லிக்கு விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் வழங்குகிறது. 

அதன்படி, எஸ்.ஜி.8561 என்ற எண் கொண்ட விமானம் காலை 07.50 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு, 11 மணிக்கு கோவையை வந்தடைகிறது. எஸ்.ஜி.8562 விமானம் காலை 11.40 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு 02.45 டெல்லியை சென்றடைகிறது. இந்த விமானம் கோவையில் இருந்து டெல்லி செல்லும் முதல் நேரடி விமானம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல, சென்னை, பெங்களூரூ உள்பட பல்வேறு நகரங்களுக்கான விமான சேவைகள் கோவையில் இருந்து வழங்கப்படுகிறது. காலை 11.05 மணி, இரவு 08.15 மற்றும் 09.55 மணிக்கு என சென்னைக்கு 3 விமானங்கள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன. காலை 10.50 மற்றும் மாலை 05.45 என இருநேரங்களில் கோவையில் இருந்து பெங்களூரூவுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுகிறது. 

"கோவையில் இருந்து டெல்லிக்கு வழங்கப்பட்டுள்ள நேரடி விமான சேவை, அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதேபோல, குறைந்த கட்டணத்தில் மேலும் பல நேரடி விமான சேவைகள் வழங்கினால், பயணிகளுக்கு உதவிகரமாக இருக்கும்," என்கிறார் விமானப் பயணி சதிஷ்.

விரைவில் கோவை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு ஏர்இந்தியா நேரடி விமான சேவையை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...