கோவை : கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் தடையில்லா குடிநீர் விநியோகம் செய்வதற்கான கட்டமைப்பு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சூயஸ் நிறுவனத்தினர் தொடங்கியுள்ளனர்.

முதற்கட்டமாக ஆர்.எஸ்.புரத்தில் உள்ள வார்டு எண் 23, 24 மற்றும் 79 (பகுதி) ஆகிய பகுதிகளில் 24 மணிநேர குடிநீர் திட்டப்பணிகளுக்காக, சுமார் 40 இடங்களில் குழி தோண்டும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது :- ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஏற்கனவே பதிக்கப்பட்டுள்ள குடிநீர் பகிர்மான குழாய்களின் நிலை ஆராயப்பட்டு வருகின்றது. இதற்காக 40 இடங்களில் குழிகள் தோண்டப்படுகின்றன. முன்னதாக, மின் இயந்திரங்களைக் கொண்டு நிலத்திற்கு அடியில் உள்ள குழாய்களின் அளவு, சேதம், தரம் ஆகியவை ஆய்வு செய்யப்படுகிறது. இந்த ஆய்வின் மூலம் குடிநீர் குழாய்களைப் புதுப்பித்தல், சேதத்தைச் சரிசெய்தல், புதிதாக குழாய் பதித்தல் உள்ளிட்ட பணிகளுக்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. இந்த வாரத்திற்குள் ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டு டிசம்பர் மாதத்தில் பொறியியல் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.
அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் மற்றும் பகிர்மான குழாயில் ஏற்படும் கோளாறுகளால் குடிநீர் வீணாவதை தடுப்பதற்காக அனைத்து குடிநீர் இணைப்புகளிலும் தானியங்கி குடிநீர் அளவீட்டுக் கருவிகள் பொருத்தப்படுகின்றன. இந்தக் கருவிகளில் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு கணக்கிடப்பட்டு, குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக கட்டணத் தொகை குடியிருப்புவாசிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பொறியியல் பணிகள் நிறைவடைந்து, ஆர்.எஸ்.புரம் பகுதியில் 24 மணிநேர குடிநீர் விநியோகத் திட்டம் முழுவதுமாக செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.