நீலகிரி : பிளாஸ்டிக் உபயோகத்தைத் தவிர்க்கும் விதமாக பிளாஸ்டிக் இல்லாத துணிப் பைளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் இன்று தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு உள்ளதால், அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட அரிமா சங்கங்களின் சார்பாக உதகை ஏ.டி.சி. பேருந்து நிறுத்தம் அருகே இன்று பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த முகாம் நடைபெற்றது.

இம்முகாமை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். முகாமில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்து பிளாஸ்டிக் பைளை தவிர்ப்பது குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பைகளை தவிர்த்து துணியால் ஆன பைகளை பயன்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு இலவசமாக துணி பைகள் வழங்கப்பட்டன. இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட அரிமா சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். முகாமில் நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.