கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நா.கார்த்திக் எம்.எல்.ஏ உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து அவர்கள் இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினர் கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு, சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ, பகுதி கழக செயலாளர் எஸ்.எம்.சாமி, வட்ட கழக செயலாளர் சிங்கை குணா, முன்னாள் மாமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு போடப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோவை ஜெ.ம்.எண்: 1 நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது எம்.எல்.ஏ உட்பட ஆறு பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு நீதிபதி வேலுசாமி வரும் 29-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.