கோவை: மதுக்கரை அருகே அமைந்துள்ள ஏ.சி.சி பள்ளியில், அந்த நிறுவனத்திற்கு சொந்தமான சிமென்ட் ஆலையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்குவதாக மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
கோவை: மதுக்கரை அருகே அமைந்துள்ள ஏ.சி.சி பள்ளியில், அந்த நிறுவனத்திற்கு சொந்தமான சிமென்ட் ஆலையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்குவதாக மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து அப்பள்ளி மாணவரின் பெற்றோர் ஒருவர் கூறுகையில், "ஏ.சி.சி சிமென்ட் ஆலையில் பணியாற்றும் 200 தொழிலாளர்கள் இந்த பள்ளியில் வந்து தங்குகின்றனர். இங்கேயே சமையல் செய்வது மது அருந்துவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இந்த பள்ளியில் மொத்தம் 52 மாணவர்கள் படிக்கின்றனர். ஆறு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

வடமாநில தொழிலாளர்கள் அரை நிர்வாணமாக தூங்குகின்றனர். இதனால், மாணவிகள் வகுப்பறையில் இருந்து வெளியேற அச்சப்படுகின்றனர். பள்ளி மைதானத்திலேயே குளிப்பதோடு, வகுப்பு நடக்கும் நேரத்தில் கூச்சலிடுகின்றனர்." என்றார்.
இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, "இது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் புகார் அளித்து விட்டோம். நடவடிக்கை இல்லாத காரணத்தால் சிமென்ட் ஆலைக்கும் புகார் அளித்தோம். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை." என்றார்.

இந்த சூழலில், பல பெற்றோர் பள்ளி மாற்றுச் சான்றிதழ் கோரி பள்ளியில் விண்ணப்பித்துள்ளனர்.