திருப்பூர் : திருப்பூரில் பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்துள்ள நிலையில், சுகாதாரப்பணியை மேற்கொள்ளாத மாநகராட்சியைக் கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : திருப்பூரில் பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்துள்ள நிலையில், சுகாதாரப்பணியை மேற்கொள்ளாத மாநகராட்சியைக் கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்துவந்தது. இந்த நிலையில், தாராபுரம் சாலையில் உள்ள தெற்குதோட்டம், சங்கிலி பள்ளம் மற்றும் பெரிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால், நள்ளிரவு முதல் அப்பகுதி மக்கள் மொட்டை மாடியில் வசித்து வருகின்றனர்.

மேலும், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் தற்போது வரை எந்த உணவு இன்றி தவித்து வருவதாகவும், மழைநீர் தேக்கத்தால் தொற்று நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மாநகராட்சிக்கு பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி
ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருப்பூர் - தாராபுரம் சாலையை மறித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், பொதுமக்கள் மறியலை கைவிடாமல் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், தாராபுரம் சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.