கோவை: தங்கள் பகுதியில் மதுபான கடை அமையக்கூடாது என்று கோரி அரசூர் பகுதி மக்கள் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்தனர்.

அரசூர் பஞ்சாயத்து தென்னம்பாளையத்தில் இருந்து ராசிபாளையம் பகுதியில் புதிதாக அமைய உள்ள மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், "இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என பல்வேறு போராட்டங்கள் நடத்தி தடை பெற்றோம். தற்போது ஒன்றரை கி.மீ. தூரம் தள்ளி கடை தீர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், தென்னம்பாளையத்தில் இருந்து ராசிபாளையம் சாலைக்கு வர ஒரே வழி மட்டுமே உள்ள நிலையில் அந்த பகுதியில் மதுபான கடை திறக்கப்பட்டால் பள்ளி, கல்லூரி சென்று வரும் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏ.பி.டி நகர், விசாலா நகர் பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள். மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டு அங்கு மதுபான கடை அமைவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்." என்றனர்.

இதே போல் மேட்டுப்பாளையம் தாலுக்கா காரமடை ஒன்றியம் சின்ன கள்ளிபட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ரங்கம்பாளையம் கிராமத்தில் மதுபான கடை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்த கிராமத்திற்கு அருகில் ஒன்றரை கி.மீ. தூரம் உள்ள பெத்தி குட்டையில் மதுபான கடை உள்ளது எனவும், தற்போது அமைய உள்ள மதுபான கடை முழுக்க விவசாய பூமி என்பதால் கடையை திறக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி மனு அளித்தனர்.