வீட்டில் பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை: கோவையில் ஆறு பேர் கைது

கோவை: கோவை ராமநாதபுரம் போலீசார் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த ஆறு பேரை கைது செய்து அவர்களிடமிருந்த 1 கிலோவுக்கும் மேற்பட்ட கஞ்சா மற்றும் ரூ.35 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

கோவை: கோவை ராமநாதபுரம் போலீசார் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த ஆறு பேரை கைது செய்து அவர்களிடமிருந்த 1 கிலோவுக்கும் மேற்பட்ட கஞ்சா மற்றும் ரூ.35 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் நேற்று உக்கடம் பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆர்.ஜி.நகர் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.

இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் அவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த கிஜாஸ் (21), ஆலப்புழாவைச் சேர்ந்த அஸ்வின் ராஜ் (21), கோழிக்கோட்டை சேர்ந்த சானு (21), வடகரையைச் சேர்ந்த அஸ்வின் (22), கொல்லத்தைச் சேர்ந்த அஜிஸ் (21), அம்ஜீத் (21), ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் ஆர்.ஜி நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து கஞ்சாவை பதுக்கி வைத்து கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு கிலோ 500 கிராம் கஞ்சா, ரூபாய் 35 ஆயிரம், 6 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...