கோவை: புலிகள் கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன் விலங்குகள் தொடர்பான புரிதல் வேண்டும் என்று, கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் கோவையில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கோயம்புத்தூர் வனப்பகுதிகளில் உள்ள புலிகள் குறித்த கணக்கெடுப்பு இன்று தொடங்கியுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த இந்த கணக்கெடுப்பு பணியில் தன்னார்வலர்கள், வனத்துறையினர் என மொத்தம் 100 பேர் இந்த பணியில் ஈடுபட உள்ளனர்.
நேரடியாகப் பார்த்தல், காமிரா கொண்டு கண்காணித்தல், காலடித் தடம் கொண்டு அறிதல் போன்ற பல்வேறு முறைகளில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. முன்னதாக இவர்களுக்கான ஆலோசனை கூட்டம் கோவை வனக்கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பேசியதாவது, "புலிகள் இரவு நேரங்களில் நடமாடும் பழக்கம் கொண்டவை. அவற்றைக் காண்பது அரிது. அதே நேரத்தில் புலிகள் உலவித்திரியும் சூழலில், பல்வேறு அடையாளங்களை விட்டுச் செல்லும். புலிகள் தொடர்பான புரிதல் உங்களிடம் இருந்தால் மட்டுமே துல்லியமான கணக்கு கிடைக்கும்." என்றார்.
ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர், மாவட்டத்தில் உள்ள எழு வனச்சரகங்களிலும் உள்ள, 45 பகுதிகளுக்கு அவர்கள் அனுப்பப்பட உள்ளனர். இவர்கள் சேகரிக்கும் தகவல்கள் M-STrIPES (Monitoring System for Tiger-Intensive Protection and Ecological Status) என்ற கருவி மூலம் சேகரிக்கப்படுகிறது.
முன்னதாக, டபிள்யு.டபிள்யு.எஃப் (Worldwide Fund for Nature) அமைப்பைச் சேர்ந்த பூமிநாதன் தன்னார்வலர்களிடம் கணக்கெடுப்பு பணியின் போது முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், யானைகள் நடமாட்டம் இருக்கும் இடங்களில் வன வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.