கோவை: பெட்ரோல்-டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி ஹிந்து மக்கள் பரிஷத் கட்சியினர் குதிரையில் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து உச்சத்தை எட்டிய நிலையில் பொதுமக்கள் கடும் சிரமத்கிற்கு உள்ளாகி வருகின்றனர். இதனைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்றதை தொடர்ந்து மத்திய அரசு கடந்த வாரம் பெட்ரோல்,டீசல் விலையை 2.50 ரூபாயை குறைத்தது.

தற்போது 85.26 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோலும், டீசல் ரூ.78.04-க்கும் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு விலை குறைத்து போல, மாநில அரசும் அதிகாரத்திற்கு உட்பட்டு விதிக்கும் மதிப்பு கூட்டு வரியை குறைக்க வலியுறுத்தி ஹிந்து மக்கள் பரிஷத் அமைப்பினர் குதிரையில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மக்களின் சிரமத்தை போக்கிட மாநில அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அக்கட்சியினர் இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் மக்கள் மாட்டு வண்டி, குதிரை வண்டிகளில் அதிகம் பயணிக்க நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவே உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
குதிரையுடன் மனு அளிக்க வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது