கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் ராக்கிங் விவகாரம்; நான்கு மாணவர்கள் மீது நடவடிக்கை

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவ மாணவர்கள் ராக்கிங் செய்தது தொடர்பாக, ராக்கிங் தடுப்பு குழு உத்தரவின் பேரில் நான்கு மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவ மாணவர்கள் ராக்கிங் செய்தது தொடர்பாக, ராக்கிங் தடுப்பு குழு உத்தரவின் பேரில் நான்கு மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் திருவண்ணாமலையை சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவரை அவரது சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளனர். அதேபோல சினிமா பாணியில் என்னை தெரியாதா? என்னை ஊருக்கே தெரியும் உனக்கு தெரியாதா? என்று கேட்டு ஜூனியர் மாணவரை மனம் வருந்தும்படி கிண்டல் பேசி உள்ளனர்.

மேலும், அந்த மாணவனைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இப்படியிருக்க பாதிக்கப்பட்ட ஜூனியர் மாணவர் தனது மாமாவின் உதவியுடன் டெல்லியில் செயல்படும் ராக்கிங் தடுப்புக் குழுவிற்கு புகார் அளித்துள்ளார். இந்நிலையில், ராக்கிங் தடுப்புக் குழுவினர் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு டீன் அசோகனுக்கு உத்தரவிட்டுள்ளனர்.



இந்நிலையில் டீன் தலைமையிலான குழுவினர் நடத்திய விசாரணையில் ஜூனியர் மாணவரை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்தது உறுதியானது. இதையடுத்து, கல்லூரி நிர்வாகம் ராக்கிங்கில் ஈடுபட்ட நான்கு மாணவர்களை விடுதியில் இருந்து ஒரு ஆண்டுக்கு சஸ்பெண்டு செய்ததுடன், ராக்கிங்கிற்கு முக்கிய காரணமாக இருந்த ஒரு மாணவனை ஒரு மாதத்திற்கு கல்லூரியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

அதேபோல ராக்கிங் தொடர்பாக புகார் அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், இன்னும் பல்வேறு கல்லூரிகளிலும் ராக்கிங் கொடுமைகள் தொடர்ந்து நடந்த வண்ணம் தான் உள்ளது. இதில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்க்கும் உன்னத பணியை செய்யும் மருத்துவ மாணவர்களே இதுபோன்ற மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடும் தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...