கோவை: தை,ஆடி,புரட்டாசிபுரட்டாசி அமாவாசைகளில் மகாளய அமாவாசை சிறப்பு அமாவாசையாகும். இந்த அமாவசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செயவதின் மூலம் அவர்களின் ஆசி கிடைக்க பெற்று பாவங்கள் நீங்கும் என நம்பப்டுகிறது
கோவை: தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசைகளில் மகாளய அமாவாசை சிறப்பு அமாவாசையாகும். இந்த அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதின் மூலம் அவர்களின் ஆசி கிடைக்க பெற்று பாவங்கள் நீங்கும் என நம்பப்படுகிறது.
புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை அன்று திதி கொடுக்கப்பட்டால் முழு பயனையும் பெறுவார்கள் எனவும், இந்த தினத்தில் முன்னோர்கள் பூமிக்கு வருவதாகவும் ஐதீகம். மறைந்த பெற்றோர், மூதாதையருக்கு இந்த அமாவாசாவை அன்று புனித நீர் நிலையங்கள் உள்ள பகுதிகளில் பித்ருக்களை வழிபட்டு தர்ப்பணம் செய்யப்படுகிறது.

அதன்படி, மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் படித்துறையில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் படித்துறையில் குவிந்தனர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் முடித்த பின்னர் பேரூர் கோவில்களில் வழிபாடு செய்தனர். காலை முதலே அதிக அளவில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதனையொட்டி நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். கூட்ட நெரிசலை சமாளிக்க வாகனங்கள் படித்துறை வரை அனுமதிக்காமல், பேரூர் தமிழ் கல்லூரி அருகில் ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக பேரூர் படித்துறையில் தண்ணீர் சிறிதளவு ஓடியதால் தர்ப்பணம் செய்ய வந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்