நவராத்திரி ஸ்பெசல்: ஜூவெல் ஒன் வழங்கும் 'பேசும் பொம்மைகள்'

கோவை: நவராத்திரியை முன்னிட்டு ஜூவெல் ஒன் நிறுவனம் சார்பில் அக்டோபர் 10 முதல் 18 வரை மாலை 5.30 முதல் 8.30 வரை ப்ரோஸோன் மாலில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


கோவை: நவராத்திரியை முன்னிட்டு ஜூவெல் ஒன் நிறுவனம் சார்பில் அக்டோபர் 10 முதல் 18 வரை மாலை 5.30 முதல் 8.30 வரை ப்ரோஸோன் மாலில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இது குறித்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-

 'அழகு ' என்ற தன்மை எந்த விளக்கங்களுக்குள்ளும் கட்டமைப்புகளுக்குள்ளும் அடங்காது எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாக கொண்டாடவிருக்கும் இந்நிகழ்வில் திருநங்கைகள், ஆதரவற்ற குழந்தைகள் ,மாற்றுத் திறனாளிகள், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளவர்கள் ஆகியோர் பங்கு கொள்ளும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளன.

மேலும் இந்நிகழ்வை சிறப்பிக்க , பிரபல பாடகர் கானா பாலா, சூப்பர் சிங்கர் புகழ் ரக்ஷிதா சுரேஷ் , பத்மஸ்ரீ விருது பெற்ற பக்தவத்சலம் இவர்களுடன், கோவை மாநகராட்சி ஆணையர் விஜய் கார்த்திகேயன் அவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். 

 

அக்டோபர் 06 சனிக்கிழமை நடந்த இதன் தொடக்க விழாவில் இந்நிகழ்வை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் , சமூக வலைதளங்களில் பகிர்வதற்கும் ஏதுவாக , " தம்ஸ் அப் " வடிவத்தில் பலர் கூடி நின்று புகைப்படங்கள் எடுத்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.



ஜூவெல் ஒன் இயக்குனர் நிஷ்டா இது குறித்து கூறும்போது,

"பொதுவாக வீடுகளில் நவராத்தியின் போது கொலு வைப்பார்கள். நண்பர்களை கூப்பிட்டு பெரிய கொலுவாக அமைக்க வேண்டும் என்று சொல்வார்கள். நாம் சமூகத்தையே அழைத்து அனைவருக்கும் உதவும் விதமாக அரசுப்பள்ளிக் குழந்தைகள் தொடங்கி திருநங்கைகள், ஆதரவற்ற குழந்தைகள் , மன நலக்குறைபாடு மற்றும் உடல் மாற்றுதிறன் கொண்ட குழந்தைகள் என அனைவரையும் மகிழ்வித்து உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுக்கான கலை நிகழ்ச்சிகளை ''பேசும் பொம்மைகள்" என்ற தலைப்பின் கீழ் நடத்துகிறோம். சந்தர்ப்பங்கள் மறுக்கப்படும் அவர்களுக்கு நல்ல மேடையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வை ஒருங்கிணைத்திருக்கிறோம்.

அவர்களின் மகிழ்ச்சியே எங்களின் பிரதானக் குறிக்கோள். கானா பாலா முதலிய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கின்றனர். மக்கள் ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக ''தம்ஸ் அப்" வடிவில் நூற்றுக்கணக்கானோர் நின்று பங்களித்தது மகிழ்ச்சியை அளித்தது. ஒன்பது நாட்கள் நடக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டு சமுதாயத்தில் ஒதுங்கி இருக்கும் அவர்களுக்கு ஒரு புதிய முயற்சியில் நாமும் பங்கெடுத்துக் கொள்வோம் என்று அனைவரையும் அழைக்கிறேன்." என்றார்

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...