கோவை: கோவை செல்வபுரம் மற்றும் போத்தனூர் பகுதிகளில் மின்சாரம் தாக்கி இரண்டு இளைஞர்கள் பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

செல்வபுரம் பகுதியில் வசிப்பவர் ராமு (41). இவருடைய அக்கா சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவிலில் உள்ளார். அவருடைய மகன் ராஜா (19) கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஹோட்டல் வேலைக்காக கோவையில் வசித்து வருகிறார். ராஜா சுந்தரம் தெருவில் உள்ள பெரியநாயகி ஹோட்டலில் தங்கி பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பணி முடிந்து ஹோட்டலில் உள்ள அவரது அறைக்குச் சென்று உள்ளார். அப்போது செல்போன் சார்ஜ் போட்டு விட்டு வயரை அகற்ற முயன்றபோது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் மயக்கமடைந்த ராஜாவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சிகிச்சை பலனில்லாமல் ராஜா உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல தஞ்சாவூர் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் செல்லத்துரை(29). இவர் போத்தனூர் கருணாநிதி நகர் முதல் தெருவில் உள்ள ஒரு புதிய வீடு கட்டும் பணியில் இருந்தார்.
நேற்று மாலை புதிய வீட்டின் மேல் தளத்தில்
சென்ற மின்சார கம்பியில் கை பட்டதில்
மின்சாரம் தாக்கி மயங்கிக் கீழே விழுந்தார். பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இவருக்கு ஒரு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் ஒரே நாளில் இரண்டு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.