கோவை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி கோவை காந்தி பார்க் ரவுண்டானா பகுதியில் அகில பாரத அனுமன் சேனா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற
தீர்ப்பை கேரள அரசு மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி கோவை காந்தி பார்க் ரவுண்டானா பகுதியில் அகில பாரத அனுமன் சேனா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளும் 50 வயதைத் தாண்டிய பெண்களும் மட்டும் நுழைய அனுமதி இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்டோர் பலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம். ஆணும், பெண்ணும் சமம் என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்தத் தீர்ப்பிற்கு ஹிந்து அமைப்புகள் சார்பில் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள இந்து அமைப்புகள் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
அதேபோல, கோவையில் இன்று அனுமன் சேனா சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு செய்து இதில் வெற்றி காண வேண்டும் எனவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர்.
இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருப்போம், மதத்தையும் மத வழிபாட்டை கலாச்சாரத்தையும் காப்போம் என்றும் அனைவரும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் ஆண்கள், பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், தடையை மீறி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.