சென்னை: வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழல் நிலவுவதாகவும், அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழல் நிலவுவதாகவும், அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது. இது ஒரிசா அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. அரபிக்கடலில் வரும் 12-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
சென்னையில் பரவலான மழை பெய்யும். வடகிழக்கு பருவ மழைக்கு சாதகமான சூழல் நிலவுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.