கோவை: கோவை மத்திய ரயில் நிலைய பிளாட்பாரம் ஐந்தில் பிறந்து இருபது நாட்களே ஆன நிலையில் குப்பை தொட்டியிலிருந்து ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

கோவை ரயில் நிலையத்தில் குழந்தைகள் உதவி மையம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இயங்கி வருகிறது.
இதனிடையே நேற்று தமிழ்நாடு ரயில்வே காவல்துறையுடன் இணைந்து குழந்தைகள் உதவி மைய குழுவினர், பிறந்து 20 நாட்களே ஆன குழந்தையை குப்பைத் தொட்டியிலிருந்து மீட்டுள்ளனர்.

அதே நேரம் குழந்தையின் தாய் தப்பி ஒட முயற்சிக்கும் போது அவரையும் பிடித்துள்ளனர்.
குழந்தையின் தாய் சத்யா (20)என்பதும் அவர் சேலத்தை சார்ந்தவர் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காட்பாடி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற அவர் கணவர் தனசேகரன் தன்னை விட்டுச் சென்றதும் குழந்தையை வளர்க்க முடியாது என எண்ணி இவ்வாறு செய்துள்ளார்.
இது குறித்து குழந்தைகள் உதவி மைய குழுவை சார்ந்த பிரபு கூறுகையில், "மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. சிறு வயதில் திருமணம் செய்து கொண்டு இவ்வாறு செய்கின்றனர். இந்த மாதத்தில் மட்டும் இதே போன்று நான்கு குழந்தைகளை மீட்டுள்ளோம்.
அதோடு, வீட்டை விட்டு பள்ளி பருவத்தில் ஓடி வரும் குழந்தைகள், குழந்தை தொழிலாளிகள் என இதுவரை 250 க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டுள்ளோம்." என்றார்.
எறும்பு கடிகளுடன் மீட்கப்பட்ட அந்த குழந்தை கோவை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாளை குழந்தை நல வாரியம் அலுவலகம் முன்பு குழந்தை ஒப்படைக்கப்பட்டு அதன் பின்னர் குழந்தையும் தாயும் கண்காணிக்கப்படுவார்கள்.