கோவை: கோயம்புத்தூர் வனப்பகுதிகளில் உள்ள புலிகள் குறித்த கணக்கெடுப்பு நாளை தொடங்க உள்ளது.
கோவை: கோயம்புத்தூர் வனப்பகுதிகளில் உள்ள புலிகள் குறித்த கணக்கெடுப்பு நாளை தொடங்க உள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து நாட்கள் இந்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். மாவட்ட வன அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற பின்னர் தன்னார்வலர்கள் 45 இடங்களுக்கு சென்று கணக்கெடுப்பு பணியை மேற்கொள்வார்கள்.
நேரடியாக பார்த்தல், காமிரா கொண்டு கண்காணித்தல், காலடி தடம் கொண்டு அறிதல் போன்ற பல்வேறு முறைகளில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெறும்.
இந்த தகவல்கள் நவீன கருவிகள் மூலம் திரட்டப்படும்
தன்னார்வலர்கள், வனத்துறையினர் என மொத்தம் 100 பேர் இந்த பணியில் ஈடுபட உள்ளனர்." என்றனர்.