தீயணைப்புத்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நீலகிரியில் ஆய்வு

நீலகிரி: இந்தாண்டு வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் உதகை தீயணைப்புத்துறை அலுவலகத்தில் உள்ள பொருட்கள் சரியான முறையில் இயங்குகிறதா, தீயணைப்புத்துறையினரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நீலகிரியில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை குழு தயார் நிலையில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர், தமிழ்நாடு மின் விசை நிதி, உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன அரசு முதன்மை செயலர் மற்றும் நிர்வாக இயக்குநர் சந்திரகாந்த் காம்ளே தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட பேரிடர் மீட்பு முன்னெச்சரிக்கை கூட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள பேரிடர் அலுவலகங்களை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

உதகையில் உள்ள தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று அங்கு பேரிடர் சமயங்களில் பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் உபகரணங்களை பார்வையிட்டனர்.

மேலும், உபகரணங்களையும் தயார் நிலையில் வைப்பதோடு மட்டுமின்றி சரியாக பராமரித்து வைக்க உத்தரவிடப்பட்டது. 

இந்த ஆய்வில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...