கோவை: ரத்தினபுரி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஓய்வுபெற்ற சிறை காவலர் மற்றும் அவரது மனைவி மீது லாரி மோதிய விபத்தில் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே பலியானார்.

கோவை நல்லாம்பாளையம் இராஜிகாந்தி நகரைச் சேர்ந்தவர் ஆசீர்வாதம் (75). இவர் ஓய்வு பெற்ற சிறைத்துறை காவலர் ஆவார்.
நேற்று மாலை சுமார் மூன்று மணியளவில் இவரும் இவரது மனைவி வெள்ளை தங்கமும் (65) தனது மகள் வீட்டில் இருந்து தங்களது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ரத்தினபுரியில் இருந்து நல்லாம்பாளையம் போகும் போது இவர்களை லாரி ஒன்று ஓவர் டேக் செய்தது.
அப்போது இருவரும் பின் டயரில் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் ஆசீர்வாதத்தின் மனைவி சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஆசீர்வாதத்திற்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.