திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் வடக்கு, தெற்கு மாநகர, மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "காங்கிரஸ், தி.மு.க கூட்டணி என்பது நூறு சதவீதம் உறுதியாகிவிட்டது.
இந்த கூட்டணி இந்திராகாந்தி காலம் தொட்டு ராகுல் காந்தி காலம் வரை உறுதி செய்யப்பட்ட ஒன்று, மற்ற கட்சிகளை சேர்ப்பது குறித்து தி.மு.க முடிவெடுக்கும்.

ஆனால், காங்கிரசை பொறுத்த வரை தமிழ்நாடு, பண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளை திமுக-காங்கிரஸ் கூட்டணி பெற வேண்டும். அதுதான் எங்கள் இலக்கு.
அமைச்சர்களின் வீடுகளில் மட்டுமல்லாது சட்டபேரவை சபாநாயகர் தனபால் வீட்டிலும் ரெய்டு நடத்த வேண்டும்.
ஏனெனில் அவர் சபாநாயகருக்கு உரிய தன்னடக்கத்தோடு செயல்படாமல் ஒப்பந்ததாரர்களை மிரட்டி பணம் பறித்து லஞ்ச லாவண்யத்தில் திளைத்து வருகிறார்.
தினகரனும், ஓ.பி.எஸ்-சும் இந்த பூனையும் பால் குடிக்குமா? என முகத்தை வைத்துக்கொண்டுள்ளனர். ஆனால், உலகில் மிகப்பெரிய ஊழல் பேர்வழிகள் இவர்கள் தான்." என்றார்.