கோவை : மாணவர்களின் விகிதாச்சார அடிப்படையில் தகுதி பெறும் பள்ளிகளில் தற்காலிக பகுதி நேர பயிற்றுநர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு சுமக்ரா சிக்ஷா திட்டத்தின் மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், உடல்நலம், விளையாட்டு, ஓவியம் வரைதல் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்த கல்வி இணைச் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு 6 முதல் 8-ம் வகுப்பு வரையில் 100 மாணவர்களுக்கு மேல் பயிலும் அரசு பள்ளிகளில் தற்காலிக பகுதிநேர பயிற்றுநர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் 100 மாணவர்களுக்குக் கீழ் இருப்பதால், அங்கு பணியாற்றும் தற்காலிக பகுதிநேர பயிற்றுநர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
எனவே, 6 முதல் 8-ம் வகுப்பு வரையில் 100 மாணவர்களுக்கு மேல் பயிலும் அரசு பள்ளிகளைக் கண்டறிந்து காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும், தகுதி இல்லாத பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தற்காலிக பகுதிநேர பயிற்றுநர்களை பணியில் இருந்து விடுவிக்காமல், மாணவர் விகிதாச்சாரப்படி தகுதி பெறும் பள்ளிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். மேலும், அவ்வாறு வேறு பள்ளிக்கு பணியிடம் மாற விரும்புவோருக்கு உரிய ஆணை வரும் முன்பு, பணிவிடுப்பு செய்திடக் கூடாது.
சமக்கிர சிக்ஷா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், பிற மாவட்டங்களில் உபரியாக உள்ள மற்றும் 100 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேரப் பயிற்றுநர்கள் விருப்பக் கடிதம் சமர்ப்பித்தால், அதனையும் பரிசீலிக்கலாம்.
மேலும், தகுதி வாய்ந்த பள்ளிகள், பாடவாரியாக ஒதுக்கீடு செய்ய வேண்டிய பள்ளிகள், தற்காலிக பகுதிநேர பயிற்றுநர்கள் உள்ளிட்ட பட்டியலை வெளியிட வேண்டும். இப்பட்டியல்களை மாவட்ட திட்ட அலுவலகங்களில் 8-ம் தேதியன்று ஒட்டப்பட்டு, அன்று மாலைக்குள் பள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். 9-ம் தேதி முதல் 12-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உள்ள பெட்டியில் விண்ணப்பதாரர்கள் போட வேண்டும். இவ்விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 16-ம் மாலைக்குள் ஆணைகள் வழங்கப்பட் வேண்டும்.
ஆணை வழங்கப்பட்ட பகுதிநேர பயிற்றுநர்களின் பட்டியலை 17-ம் தேதி மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்புதல் வேண்டும். இப்பணியினை முதன்மைக் கல்வி அலுவலர்கள் எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வண்ணம் முதன்மைக் கல்வி அலுவலரின் நேரடிப் பார்வையில் செய்து முடித்திட வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.