திருப்பூர் : முறையான ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்
திருப்பூர் : முறையான ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் ஊரக காவல் நிலையத்திற்குட்பட்ட ராக்கியாபாளையம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த இளைஞரை நிறுத்தி விசாரித்துள்ளனர். விசாரணையில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் பெயர் இப்ராஹிம் என்பதும், அவர் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

மேலும், அவர்கள் முறையான ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவருடன் செவந்தாம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக தங்கி பணியாற்றி வந்த சக நாட்டைச் சேர்ந்த பியன், பர்கத் ஆகிய மேலும் இருவரை திருப்பூர் ஊரக போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.