நீலகிரி : மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வந்த மலை ரயில் நடுவழியில் பழுதாகி நின்றதால், குன்னூரில் இருந்து இன்று மாலை மேட்டுப்பாளையம் வரவேண்டிய மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணியளவில் புறப்படும் மலை ரயில் ஆடர்லி ஹில் குரோவ் இடையே வந்தபோது, திடீரென பழுதாகி நின்றது. இதனைத் தொடர்ந்து, அந்த ரயிலில் உள்ளவர்கள் அனைவரும் குன்னூரில் இருந்து சென்ற மாற்று ரயில் மூலம் மாலை 4.45 மணியளவில் அழைத்து வரப்பட்டனர்.
பழுதை நீக்கும் பணி மாலை வரை நீடித்ததால் குன்னுரில் இருந்து இன்று மாலை மேட்டுப்பாளையம் வர வேண்டிய மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக இரண்டாம் சீசனுக்காக மலை ரயிலில் பயணிக்க ஆர்வமுடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.