கோவை : கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் சங்ககிரியைச் சேர்ந்த பழனியப்பனின் மகன் செல்வம் என்ற செல்வராஜ் (31). இவர், பீளமேடு பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டில் நடைபெற்ற கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார். இவர் கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஆயுள் தண்டனை கைதியாக கோவை மத்திய சிறையில் உள்ளார்.

இவரை இவரது மனைவி வாரந்தோறும் வந்து மனுப்போட்டு சந்திப்பது வழக்கம். ஆனால், மனைவிக்கும், செல்வராஜுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கோபத்தில் இருந்த மனைவி செல்வராஜை சுமார் மூன்று மாதங்களாக வந்து பார்க்கவில்லை. இதன் காரணமாக மனம் உடைந்து போன கைதி இன்று கம்பிகளை வைத்து இடது மணிக்கட்டில் அறுத்துள்ளார்.
மேலும், கொசு விரட்டி மருந்தையும் குடித்து தற்கொலைக்கு முன்றுள்ளார். இதையறிந்த சக கைதிகள் சிறைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் வந்த சிறைத்துறை அதிகாரிகள் கைதியை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு ரெட் ஜூன் வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது