நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 25 பேர் கொண்ட தேசிய மீட்புக் குழுவினர் குன்னூர் வந்தடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

மாவட்டத்தில் 233 இடங்கள் அபாயகரமான இடங்களாக மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக பாதிப்பு குன்னூர் பகுதிகளில் ஏற்படக்கூடும் என்பதால் அரக்கோணத்திலிருந்து 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு குன்னூர் வந்தடைந்தது.
இது குறித்து பேரிடர் மீட்பு குழு தலைவர் கமாண்டன்ட் அமர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் அதிகளவில் மழை பெய்ய உள்ளதாக வந்த தகவலின் பேரில், 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழு உபகரணங்களுடன் குன்னூருக்கு வந்துள்ளனர். நாளை காலை முதல் எங்களுடைய பணிகள் தொடங்கும். குன்னூரில் எங்கெங்கு பேரிடர்கள் ஏற்படக்கூடிய பகுதிகளோ, அங்கு எங்களுடைய குழுக்கள் உடனடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவார்கள். மீட்கப் படுபவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அதற்கு உண்டான அனைத்து உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளோம், என அவர் கூறினார்.