கோவை : சங்கரா கண் மருத்துவமனை மற்றும் இந்திய ரவுண்ட் டேபிள் அமைப்பும் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான 'விஷன் - எப்டிஇ' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டியில் உள்ள சங்கரா கண் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரவுண்ட் டேபிள் இந்தியாவின் தலைவர் துருவ் டால்மியா, சங்கரா கண் மருத்துவமனையில் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான ஆர்.வி. ரமணி ஆகியோர் இணைந்து 'விஷன் - எப்டிஇ' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கோவை, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் சார்பில் வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்ட பள்ளிகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கண்பார்வை சிகிச்சை அளிக்கப்படுகிறது. அடுத்த 9 மாதங்களுக்குள் 5,000 பின்தங்கிய மாணவர்கள் பயனடைய வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.