விநாயகர் சதுர்த்திக்கு கேட்ட பணத்தைக் கொடுக்காதவரின் கடை சூறை : இருவர் கைது

கோவை : விநாயகர் சதுர்த்திக்கு கேட்ட பணம் கொடுக்காத நபரின் கடையை அடித்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை ஆர்.எஸ். புரம் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை : விநாயகர் சதுர்த்திக்கு கேட்ட பணம் கொடுக்காத நபரின் கடையை அடித்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை ஆர்.எஸ். புரம் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

தடாகம் பகுதியைச் சேர்ந்த ராமனின் மகன் ஆறுமுகம் (42), தாமஸ் வீதியில் வசித்து வரும் ராமலிங்கத்தின் மகன் ரமேஷ் குமார் (42) ஆகிய இருவரும் நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடையை சேகரித்து வந்தனர். இதில், தடாகம் சாலையில் உள்ள சபரி பேக்கரி உரிமையாளரிடம் ரூ. 5,000 தருமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அவர் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை பிறகு வாங்கிக் கொள்வதாக வசூல் செய்ய வந்த இருவரும் தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.



இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி எல்லாம் முடிந்து கடந்த 3-ம் தேதி மீண்டும் பேக்கரிக்கு சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால், பேக்கரியில் உரிமையாளர் இல்லாததால், பணத்தைக் கொடுக்க பணியாளர்களும் மறுத்துவிட்டனர். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் கடையில் உள்ள பொருட்களை அடித்து உடைத்ததுடன், கத்தியை காண்பித்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். 

பின்னர், தகவலறிந்து வந்த கடை உரிமையாளர் உதயகுமார் (52) ஆர்.எஸ்.புரம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், இருவர் மீதும் 294 b,341,384 506(2) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...