கோவை : நிரந்தரமற்ற தொழிலாளர்களின் நலன் கருதி அகில இந்திய தொழிற்சங்க மய்ய கவுன்சிலின் சார்பில் வரும் 13-ம் தேதி பிரச்சாரப் பயணம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- பல லட்சக்கணக்கான நிரந்தரமற்ற தொழிலாளர்களை பாதுகாக்க கடந்த 2008-ம் ஆண்டு மே மாதம் 14-ம் தேதி தொழிலக நிலையாணைகள் திருத்தச் சட்டத்தை இயற்றி இருக்கிறது. இதற்கான அறிவிப்பாணை கடந்த 2016-ம் ஆண்டு ஜுலை 04-ம் தேதி வெளியிடப்பட்டது.
3 மாதங்களுக்குள் புதிய மாதிரி நிலையாணைகள் கொண்டு வருமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், இன்று வரை தமிழக அரசாங்கம் நிலையாணைகள் இயற்றவில்லை. இந்த நிலையில், அகில இந்திய தொழிற்சங்க மய்ய கவுன்சிலின் தேசிய தலைவர் எஸ். குமாரசாமி தலைமையில் 22-ம் தேதி முதல் பெரியநாயக்கன்பாளையம் கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமை சங்கத்தின் அலுவலகத்தில், காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடக்கவிருக்கிறது. இதையொட்டி 12,13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பிரச்சாரப் பயணம் நடக்கிறது.
மேலும், 22-ம் தேதி நடைபெற இருக்கும் பட்டினிப் போராட்டத்திற்கு முன்னதாக பிரிக்கால் ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.