கோவை : உலக சேவை வாரத்தையொட்டி கோவையில் நடைபெற்ற கண்தான விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கோவை : உலக சேவை வாரத்தையொட்டி கோவையில் நடைபெற்ற கண்தான விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

உலக சேவை வாரம் கடந்த 2-ம் தேதி தொடங்கி வரும் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அரிமா சங்கம் 324பி5-ன் சார்பில் கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பந்தய சாலையில் தொடங்கிய இந்தப் பேரணியை போக்குவரத்து உதவி ஆணையர் சுஜித்குமார் தொடங்கி வைத்தார். கண்தானம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இந்தப் பேரணியில் அன்னை வேளாங்கண்ணி, ரத்தினம் கல்லூரி, எஸ்.என்.ஆர்., கல்லூரிகளைச் சேர்ந்த 100-க்கான மாணவர்கள் பங்கேற்றனர்.

பின்னர், அரிமா சங்க மாவட்ட ஆளுநர் ஆறுமுகம் பேசியதாவது:- ஒரு வருடத்திற்கு 1.52 லட்ச கருவிழிகள் தேவைப்படும் நிலையில், தற்போது 25-30 ஆயிரம் மட்டுமே கிடைக்க பெறுகிறது. இதற்கு போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லாது தான் காரணம். ஒருவர் மரணமடையும் போது தங்களது கண்களை தானமாகக் கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும். மேலும், உலக அளவில் கண் தானம் செய்வதில் இலங்கை முதலிடத்தில் இருக்கிறது, என்றார்.

இந்தப் பேரணியில் முதல் துணைநிலை ஆளுநர் வெங்கிட சுப்ரமணியம், மாவட்ட தலைவர் சண்முக சுந்தரம் உள்ளிட்ட ஏராளமான அரிமா சங்கத்தினர் கலந்து கொண்டனர்.