திருப்பூர் : கீழடி ஆய்வினை குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அதிகாரியைப் பணியிட மாற்றம் செய்ததாக மத்திய அரசு மீது முன்னாள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினரும், ஜல்லிக்கட்டு, நாட்டு மாடுகள் தன்னார்வலருமான கார்த்திகேய சிவசேனாதிபதி குற்றச்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது :- கீழடி ஆய்வினை குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு, அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணனை அஸ்ஸாமிற்கு பணி மாற்றம் செய்தது. அதுவே ஒருசர்ச்சையாய் மாறி பல ஆராய்ச்சியாளர்களும், துறை சார்ந்த சான்றோரும் வேண்டிய பிறகும் மத்திய அரசாங்கம் செவி சாய்க்கவில்லை. தொல்லியல் ஆய்வு துறை விதிகளின்படி, எந்த ஆராய்ச்சியாளர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தாரோ அவரே அதற்கான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே.
இப்படி இருக்க அமர்நாத் ராமகிருஷ்ணனிடம் இருந்து தொல்லியல் அகழ்வாராய்ச்சி பொருட்களை வேறு ஒரு அதிகாரியிடம் ஒப்படைக்கும்படியும், அந்த ஆராய்ச்சியின் அறிக்கையைப் பிடுங்கி மற்றொரு அதிகாரியிடம் வழங்க மத்திய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. சிந்து சமவெளி நாகரிகம் ஆரம்பித்து, ஆதிச்சநல்லூர், கீழடி வரை விடாது கரும் புள்ளியாய் நம்மை இன்று வரை விரட்டுவதே தொடர் கதை ஆகிப் போனது.
இதை எல்லாம் தட்டி கேட்க வேண்டிய நமது ஆட்சியாளர்களோ, மத்திய அரசாங்கத்தின் அடிமைகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். பல்லாயிரம் வருடப் பெருமை கொண்ட தமிழ் இனத்திற்கு இந்த 2016-ம் ஆண்டு முதல் ஏற்பட்ட திட்டமிடப்பட்ட அழிவிற்கு 2019-ம் ஆண்டிலாவது ஒரு முற்றுப்புள்ளி வைப்போம் என நம்புவோம். இதனை மத்திய அரசாங்கம் திரும்ப பெறாவிட்டால் உயர்நீதிமன்றத்தையோ, உச்ச நீதிமன்றத்தையோ அணுகுவதைத் தவிர வேறு வழி இல்லை, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.