கோவை : தொடர் மழையின் காரணமாக கோவை குற்றாலத்தில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
கோவை : தொடர் மழையின் காரணமாக கோவை குற்றாலத்தில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், ஆதித மழையின் காரணமாக ரெட் அலார்ட் பிறப்பிக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனிடையே, வடகிழக்கு பருவமழையும் தீவிரமடைந்துள்ளதால், கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
மேலும், ரெட் அலார்ட் காரணமாக குளம், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் செல்வதை தடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, நாளை முதல் அடுத்த 2 நாட்களுக்கு கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. வார இறுதி நாட்களில் கோவை குற்றாலம் மூடப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சுருளி, கும்பக்கரை அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு சுற்றுலா செல்ல 3 நாட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.