கோவை : தமிழகத்திற்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை மண்டல வாரியாக எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கோவை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சியினால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் வரும் 7-ம் தேதி அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சுமார் 25 செ.மீ அளவு மழை பெய்யும் என பேரிடர் மேலாண்மைத்துறை அறிவித்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்வதற்காகக் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியின் சார்பிலும் முழு அளவில் முன்னெச்சரிக்கை ஏற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ரப்பர் படகுகளுடன் ஆயத்தமான நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், கோவை மாநகராட்சியில் பொதுமக்கள் மழைக்காலங்களில் இடையூறுகள் ஏற்பட்டால் அதுதொடர்பான புகார்களை மாநகராட்சி பிரதான அலுவலகம் 0422-2302323 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
மண்டல வாரியாக, மேற்கு மண்டலம் 0422-2551700 என்ற எண்ணிற்கும், வடக்கு மண்டலம் 0422-2243133 என்ற எண்ணிற்கும், தெற்கு மண்டலம் 0422-2252482 என்ற எண்ணிற்கும், கிழக்கு மண்டலம் 0422-2577056 என்ற எண்ணிற்கும், மத்திய மண்டலம் 0422-2215618 என்ற எண்ணிற்கும், தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். மேலும் பொதுமக்கள் மழை தொடர்பான உடனடி புகார்களை 8190000200 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மேலும், அந்தந்த மண்டலங்களுக்கென தனி குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குடியிருப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் நீரை வெளியேற்றுவதற்காக அதிநவீன இயந்திரங்களான சூப்பர் சக்கர் மெஷின், ஜெட்டிங் மெஷின், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் மோட்டார் பம்புகள் என பல்வேறு உபகரணங்கள் அந்தக் குழுவினரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதோடு, 2,600 மணல்மூட்டைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மண்டல வாரியாக தொடர்பு கொள்ளப்பட்டு உதவி கோருபவர்களுக்கு, அந்த மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் இருக்கும் குழுவினர் விரைந்து சென்று அதிநவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கோவை மாநகரில் 24 இடங்களில் மழை வெள்ளம் அதிகம் தேங்கும் இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அந்தப் பகுதிகள் மற்றும் மேம்பாலங்களின் சுரங்கப்பாதைகள் உள்ளிட்டவைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
மழை, வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் கூறியதாவது :- மழை, வெள்ள அபாய எச்சரிக்கையைத் தொடர்ந்து, மண்டல வாரியாக அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அதிநவீன இயந்திரங்களுடன் புகார் வரும் பகுதிக்கு மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்களும் தகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.