நீலகிரி : அனைத்து அரிமா சங்கங்கள் மற்றும் உதகை அரசு கலை கல்லூரியும் இணைந்து பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த பேரணி உதகையில் நடைபெற்றது.
நீலகிரி : அனைத்து அரிமா சங்கங்கள் மற்றும் உதகை அரசு கலை கல்லூரியும் இணைந்து பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த பேரணி உதகையில் நடைபெற்றது.
அரசு கலை கல்லூரி மைதானத்தில் தொடங்கிய இந்தப் பேரணியை கல்லூரி முதலமைச்சர் எம்.ஈஸ்வர மூர்த்தி மற்றும் அரிமா சங்க மாவட்ட ஆளுநர் மோதிலால் கட்டாரிய ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பல்வேறு வீதிகளின் வழியாக உதகை மத்திய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்த இந்தப் பேரணியில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது, பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த பதாதைகளை ஏந்தி பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்து கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.